இலங்கை கால்பந்து சம்மேளம் மீதான தடை நீக்கம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) மீதான தடையை நீக்குவதற்கு FIFA தீர்மானித்துள்ளது.
FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறந்த பதிலை கருத்திற்கொண்டு நேற்று (27.08.2023) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் 29 அன்று புதிய FFSL செயற்குழுவிற்கான தேர்தல் நடைபெறும் வரை FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளத்தின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக இந்த இடைநீக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 5 மணி நேரம் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan