யாழில் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வு
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, சங்கானை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்று குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குப் பொதி செய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் விலை தொடர்பான விசாரனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு ஒழுக்கமான வியாபார நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
