எரிவாயு விற்பனை தொடர்பான முறைகேடு குறித்து களப்பரிசோதனை (Photos)
பாவனையாளரிடமிருந்து கிடைக்கப் பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் களப்பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும், மாவட்ட பொறுப்பதிகாரியின் பணிப்பிற்கு அமைவாகவும் நேற்று இக்களப்பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
இத்திடீர் பரிசீலனையின் போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன்கள் பொலிஸாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் அவை சரியான விலைக்குப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எரிவாயு கொள்கலன்களை பதுக்கி வைத்த வர்த்தகருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




