இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க மற்றும் சகல துறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோர் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை அணியின் சில வீரர்கள் உபாதைகளினாலும் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அணி தலைவர் சரித் அசலங்க காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் சரித் அசலங்க பங்கேற்றாவிட்டால் குசல் மெண்டிஸ் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டி தொடரை ஏற்கனவே பாகிஸ்தான் அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
போட்டித் தொடரின் வெள்ளையடிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அத்தியாவசியமாகும். இதேவேளை, இலங்கை அணி இளம் வீரர் பவன் ரத்நாயக்க விற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
. வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோரும் உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகமே எனவும் பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam