சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மேல் சுவாசக்குழாயில் வைரஸ் காய்ச்சல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக இருமல், சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சில குழந்தைகளுக்கு வாந்தியும் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னரே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இரத்த பரிசோதனை
எனவே 03 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், முழு இரத்த பரிசோதனை செய்து, டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும், வறுத்த அரிசி கஞ்சி, ஆரஞ்சு,மாதுளை, வாழைப்பழம், தயிர், எண்ணெய், பப்பாசி, பாலாடைக்கட்டி போன்றவற்றை தவிர்ப்பது பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
