முல்லைத்தீவில் பண்டிகைக்கால சிறப்பு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய வர்த்தகர்கள் புதுவருட தினத்தை முன்னிட்டு சிறப்பு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக எமதுபிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு ,நடடிவக்கைகளை இப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றிய பொதுமக்கள் தமது அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிககவனம் செலுத்திவருகின்றனர்.
நாளை பிறக்கவிருக்கும் 2021 புதிய ஆண்டிலாவது இந்த கொரோனா வைரஸ் முற்றும் முழுதாக அழிக்கப்பட்டு பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளில் சீராக முன்னெடுக்கப்படும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam