வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்!
துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளன.
வருடாந்த மஹோட்சவம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பிரதம குருக்கள் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.
பெருந்திருவிழா
எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை பாம்பு திருவிழாவும், இரண்டாம் திகதி வியாழக்கிழமை கம்சன்போர் திருவிழாவும், மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை வேட்டைத் திருவிழாவும், நான்காம் திகதி சனிக்கிழமை சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், ஆறாம் திகதி திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், ஏழாம் திகதி செவ்வாய்க்கிழமை கேணித் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று மாலை கொடி இறக்கமும் இடம்பெறும்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இரண்டாம் நாளான 22.09.2025 திங்கட்கிழமை முதல் 7ம் திருவிழாவான 27.09.2025 வரை உள்வீதியுலாவும் இடம்பெறவுள்ளது.
28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும்
29.09.2025 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழாவும்
30.09.2025 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழாவும்
01.10.2025 புதன்கிழமை பாம்பு திருவிழாவும்
02.10.2025 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழாவும்
03.10.2025 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழாவும்
04.10.2025 சனிக்கிழமை சப்பறத்திருவிழாவும்
05.10.2025 ஞாயிறுக்கிழமை தேர்த்திருவிழாவும்
06.10.2025 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும்
07.10.2025 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும்
08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம்பெறவுள்ளது.
திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன், நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுளதூடன் பருத்தித்துறை போலீஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்-எரிமலை



