நாட்டில் சில தேவாலயங்களில் நடைபெற்ற வருடாந்த திருநாள்(Video)
புத்தளம்-தலவில் புனித அன்னமாள் வருடாந்த ஆடி மாத திருவிழா கடந்த 31ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.
சிலாபம் மரை மாவட்ட ஆயர் வெலர்ன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை திருப்பலியை கூட்டாக ஒப்புகொடுத்தனர்.
நவநாள் ஆராதனைகள்
திருப்பலியை தொடர்ந்து புனித அன்னமாளின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. ஆயர்கள் குருக்கல் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி, சிந்தனையாளர் அமல் மாயாதுன்ன, புத்தளம் மாவட்ட செயலாளர் சுனானந்த ஹேரத் ஆகியோர் நேற்றைய மாங்கல்ய திவ்ய பூஜையில் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் திருப்பலி நேற்று(06.08.2023) இடம்பெற்றது.
தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஞானரூபன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற திருநாள் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து லிகோரியாரின் திருச்சொருபம் தாங்கிய ஊர்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கச்சாய் வீதி வழியாக கிராமத்தை சுற்றி ஆலயத்தை சென்றடைந்துள்ளது.








நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
