நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார பெரும் திருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார பெரும் திருவிழா இன்று(21) சிறப்பாக ஆரம்பமாகியது.
இன்றிலிருந்து 11 தினங்கள் இடம்பெறவுள்ள அலங்கார பெரும் திரு விழாவில் 5ம் நாளான 25/09/2026 வெள்ளிக்கிழமை திருவிழாவில் நாகதம்பிரான் வெளிவீதி உலா வருகை தருவார்.
அலங்கார பெரும் திருவிழா
6ஆம் நாள் (26/09/2026) சனிக்கிழமை பாம்புத் திருவிழாவும், 7ஆம் நாள் (27/09/2026) ஞாயிற்றுக்கிழமை கப்பல் திருவிழாவும், 8ஆம் நாள் (28/09/2026) திங்கள்கிழமை வேட்டைத் திருவிழாவும், 9ஆம் நாள் (29/09/2026) செவ்வாய்க் கிழமை சம்பறத் திருவிழாவும், 10ஆம் நாள் (30/09/2026) புதன்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், 11ஆம் நாள் (01/10/2026) கேணித் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று (02/10/2026) வைரவர் மடையுடன் அலங்காரத் திருவிழா நிறைவடையவுள்ளது.
கிரியைகளை பிரணவ சர்மா தலைமையில் சிவ சண்முக குருக்கள், மற்றும் பிரசாத் சர்மா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
ஓம பூசை, வசந்த மண்டப பூசை ஆகியவற்றை தொடர்ந்து நாக தம்பிரான் உள் வீதி வலம் வந்தார்.