30 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் உரம்! - வெளியான தகவல்
உலகில் சேதனபசைளையை தயாரிக்கும் முதல் நாடு என்று பெயர் எடுக்க விழைந்த முட்டாள்தனமான தீர்மானத்தின் விளைவே இன்று விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கு ஒரு மூடை உரம் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தினதும் நாட்டின் அமைச்சர்களினதும் கண்மூடித்தனமாக செயற்படுவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
“இன்று கிராமங்களில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். விவசாயிகளால் உரத்தை 30,000 ரூபா கொடுத்து வாங்க முடியாது.
குறித்த உரம் மற்றும் பீடை நாசினிகள் இன்மையால் சோளப்பயிர் செய்கையில் இம்முறை 50000 மொட்ரிக் தொன்னை கூட விளைச்சலாக பெற முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சோளத்தை கூடிய தொகை செலுத்தி இறக்குமதி செய்ய வேண்டி வரும். முட்டையின் விலை 50 ரூபா வரை உயரும், கோழியின் விலை 1300 வரை உயரும்.
சிங்கள புத்தாண்டாகும் போது ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா வரை அதிகரித்துச் செல்லும், தற்போது காய்கறி பெட்டிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு போட வேண்டும். பொலிஸாருக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் 500 ரூபா அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் இன்று டொலர்கள் இல்லை. இதற்கு கப்ராலும் பி.பி.ஜெயசுந்தரவுமே பொறுப்பாளிகளாவர் என்றும் ஹரிசன் குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச, வாசுதேவ மற்றும் கம்மன்பில போன்றோர், அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு இருந்து கொண்டே நீதிமன்றம் செல்வது கபட நாடகம் என்றும் ஹரிசன் குறிப்பிட்டார்

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி Manithan
