அரசினால் வழங்கப்பட்ட உரத்தினால் எவ்வித பயனும் இல்லை: கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு (Photos)
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேதன உரத்தினால் தமக்கு எந்த வித பயனும் கிடைக்கவில்லை என தெரிவித்து வட்டக்கச்சி -இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
நேற்று தங்களது வயல் நிலங்களில் நின்றவாறு அரசினால் வழங்கப்பட்ட திரவ உரத்தை ஏந்தி நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தின் கீழ் இம்முறை 3000ற்கு மேற்பட்ட ஏக்கரில் காலபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யூரியா தடை செய்யப்பட்ட நிலையில் தங்களுக்கு யூரியாவுக்கு பதிலாக வழங்கப்பட்ட நனோ திரவ உரம் மற்றும் ஈக்கோ வீட்டா என்ற திரவ உரங்களினால் எந்த வித பயனும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்முறை நெல் அறுவடையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்றும்
விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




