கமநல சேவை திணைக்களத்தினரால் விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கமநல சேவை திணைக்களத்தினருக்கு கிடைக்க பெற்ற உரத்தினை விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ யூரியா 200 ரூபாய் வீதம் 20 கிலோ உரம் வழங்கப்பட்டு வருகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட யூரியா
அரசாங்கத்தினால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரமே விவசாயிகளுக்கு இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உரம் வழங்கும் நடவடிக்கை முல்லைத்தீவின் குமுழமுனை, பாண்டியன்குளம், உடையார்கட்டு மற்றும் ஒட்டு சுட்டான் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தனியார் கடைகளில் 50 லிலோ யூரியா 38 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri