பசளை பிரச்சினை சீனாவுடன் ராஜதந்திர பிரச்சினையாக மாறும் நிலைமை
சீனாவின் சேதனப் பசளை தொடர்பான பிரச்சினை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர பிரச்சினையாக மாற நிலை உருவாகி வருவதாகவும் பசளை நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்று தயாராகி வருவதாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் சேதனப் பசளை தொடர்பான பிரச்சினையில் சிக்கி இருக்கும் சீன நிறுவனம் இந்த பிரச்சினை தற்போது சீன அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் இந்த விடயம் சம்பந்தமான சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த நிறுவனம் சபதம் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது என இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் அந்த பசளை தொகையை ஏற்க மறுத்து விட்டது.
எவ்வாறாயினும் குறித்த பசளை தொகையின் மாதிரிகளை பரிசோதனை செய்த மூன்றாவது தரப்பு, அந்த பசளை மாதிரிகளில் பாதிப்பான நுண்ணுயிர்கள் இல்லை என கூறியிருந்தது.