முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை: பயணிகள் குற்றச்சாட்டு
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்ட படகுகளில் ஒன்றான “குமுதினி” படகு திருத்தப் பணிகள் காரணமாக தற்போது சேவையில் ஈடுபடவில்லை.
எரிபொருள் விநியோகம்: QR குறியீடு மற்றும் ஒற்றை - இரட்டை இலக்க முறை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
இதேவேளை “வடதாரகை” படகு திருத்தப் பணிகளுக்காக திருகோணமலையில் இருந்தும், “நெடுந்தாரகை” படகு திருத்தப் பணிகளுக்காக நெடுந்தீவில் இருந்தும் பயணிகள் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு சொந்தமான படகுகள் அனைத்தும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
படகு சேவை இடைநிறுத்தம்
தற்போது தனியார் படகான “கரிகணன்” படகு மட்டுமே பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக வழக்கமாக இடம்பெறும் அதன் காலை 11.30 மணி சேவையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் காலை 11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு சேவைகள் தொடர்பில் உரிய திட்டமிடல் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகளை செய்யும் விடயத்திலும் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam