அரசியல் தலைமைத்துவங்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் பெண்ணுரிமை! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா
தமிழ் பேசும் மக்களிலிருந்து யாராவது ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்களா என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கேள்வி எமுப்பியுள்ளார்.
திருகோணமலை தமிழர் பேரவை நடாத்திய சர்வதேச மகளிர் விழாவும் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெண்களின் எழச்சி பற்றியும் அவர்களுக்கான உரிமைகள் பற்றியும் இன்று அதிகளவானவர்கள் பேசுவார்கள். ஆனால் அவர்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை எழுச்சிபெறச் செய்ய இங்கு யாரும் தயாரில்லை. எல்லோரும் வெறும் அலங்கார வார்த்தைகளால் பெண்களை ஏமாற்ற முனைகின்றார்களே தவிர நடைமுறைச் செயல்வீரர்கள் என்று யாரையும் காண முடியவில்லை.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி
தமிழ்ச் சூழலை எடுத்துக் கொள்வோமாயின்; தேர்தல் காலத்தில் தமக்கு வாக்களிப்பதற்கு மட்டுமே பெண்கள் தேவை ஆனால் பெண்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் எந்தக் காலத்திலும் நிறைவேற்றப்படுவதில்லை.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான 25 சதவீத இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்பட்டதா? இல்லை வெறும் கண் துடைப்பு மட்டுமே. பெண்களை தெளிவாக ஏமாற்ற இவர்களால் வெளிப்படையாக முடிகின்றது.
நாடாளுமன்றில் சிங்கள தேசிய கட்சிகளில் தெரிவாக 13 பெண்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் அதுவும் ஜந்து சதவீதமே ஒரு முஸ்லிம் பெண்ணோ அல்லது ஒரு தமிழ் பெண்ணோ பாராளுமன்றில் இல்லை. மலையகத்தில் இருந்து ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடக் காணவில்லை. இதுதான் பெண்களுக்காக சம உரிமையா? மகளிர் தினம் என்பது ஒரு சம்பிரதாயத்தக்காக்தான் கொண்டாடப்படுகின்றது. மற்றபடி அதில் பெண்களுக்காகன வென்றெடுக்க வேண்டி
ய உரிமைகள் எதையும் அத்தினம் பெற்றுத்தருவதாக இல்லை. குறைந்தபட்சம் உறுதிப்படுத்துவதாகக் கூட இல்லை எனவே பெண்களுக்காக பெண்கள் தனித்துவமாக எழுச்சி கொள்ள வேண்டும்.
ஆண்களின் வாக்குகளைவிடக் கூடுதலான வாக்கு வீதத்தைக் கொண்டவர்கள் பெண்கள் என்றாலும் அவர்களது வாக்குகள் அவர்களை ஏமாற்றும் ஆண்களின் வெற்றிக்காக மட்டுமே பயன்படுகின்றது. அல்லது வஞ்சகமாக ஏமாற்றிப் பெற்றுக்கொள்கின்றார்கள்.
பெண்களாக விழிப்படைந்து தாமாக எழுச்சி கொள்ளாதவரை ஆண்களால் வாக்குகளுக்காக அரசியல் ரீதியில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு எந்த மாற்றீடும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
