நிர்க்கதியான நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் நாளாந்தம் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்பகுதிகள் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில்; புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கோவிட் தொற்று இனங்காணப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17-05-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டு, மூன்று நாட்களின் பின்னர் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டது.
எனினும் குறித்த மாவட்டத்தில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள்; பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட நாளாந்தம் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்த குடுப்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாகனங்களில் நடமாடும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதை சில பகுதிகளில் அவதானிக்க முடிகின்றது.
எனினும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் இன்றி தவிக்கும் வறுமைக்கோட்டு
மக்களின் நிலையை மிகப் பரிதாபகரமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.


