காத்தான்குடியில் பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி கைது
காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரி
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஷகி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று மாலை குறித்த போதை பொருள் வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
