யாழ்.நெல்லியடி வணிகர் கழகத்தினரால் வர்த்தகர்கள் கௌரவிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர் கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல்
வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (19.06.2024) நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலைமையில் நடைபெற்றது.
பலர் பங்கேற்பு
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மங்கள இசை முழங்க மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கள சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத்தொடர்ந்து வரவேற்பு உரை, தலைமை உரை என்பன இடம் பெற்றன.
இந்நிகழ்வில் நெல்லியடி வணிகர் கழக உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர்,
வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள பணிப்பாளர்
ஆ.கேதீஸ்வரன், கரவெட்டி பிரதேச சபை செயலாளர், நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு
சங்க தலைவர்,நெல்லியடி வணிகர் கழக நிர்வாகிகள் என பலரும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.