நான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை: செல்வம் அடைக்கலநாதன்
தான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிந்தேன், ஆனாலும் நான் அதனை இதுவரை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக நியமனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்கள் நேற்று (24.02.2023) வழங்கப்பட்டிருந்தன.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பதவியானது அரச தரப்பு எம்.பிகள் மற்றும் அரச ஆதரவு தரப்பினர்
ஆகியோருக்கே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan