தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவுக்கு கடிதம் எழுதியதா கூட்டமைப்பு? கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?
தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை. சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.
கட்சித் தலைமையும் உறுப்பினர்களும் எடுத்த முடிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்னை குறை கூறுவது தவறானது. இது எனக்கு மனவருத்தத்தை தருகிறது.
யார் மாகாண சபையை குழப்பினார்கள். யார் மறைமுகமாக இருந்து செயற்பட்டார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும். கட்சியின் நலன்கருதி அதனை வெளியிடவில்லை.
புலிகளுக்கு எதிரான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சி ஐ.நாவுக்கு கடிதம் எழுதவில்லை.
அவ்வாறு வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை.
தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறானதொரு முடிவை எடுப்பார் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video