கிண்ணியாவில் குப்பை மேட்டுக்கு வரும் யானையால் குடியிருப்போர் அச்சம்
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம் சின்னத் தோட்டம் பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கிண்ணியா நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதால், கழிவுகளை உண்ண வருகின்ற யானை அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வந்து தம்மையும் தமது தோட்ட பயிர்களையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலி கடந்த சில வருடங்களாக இயங்காததால் குப்பை மேட்டுக்கு வருகின்ற யானை வீடுகளை நோக்கி வரும் ஆபத்தான சூழ்நிலை காணப்படுகின்றது.
மக்களின் கோரிக்கை
ஏற்கனவே, இந்த யானை வீடுகளையும் வீட்டுத் தோட்ட பயிர்களையும் அழித்துள்ளதாக கூறப்படுவதோடு இப்பொழுது மின்சார வேலியும் இயங்காததால் மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், மின்சார வேலியை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுப்பதோடு தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
