எஃப்சிஐடிக்கு அழைக்கப்பட்ட ரணிலின் மனைவிக்கு எழும் ஆதரவு
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) வழங்கிய அழைப்பாணை தொடர்பாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவரது நீண்டகால சுயாதீன கல்வி பங்களிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியிலான அங்கீகாரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான சட்ட நடைமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்
அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கும்போது சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு, எவருக்கும் அரசியல் நோக்கில் பழிவாங்கல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரத்தில், கல்வி சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், பொதுத் துறையிலுள்ள நபர்களுக்கு எதிரான விசாரணைகள் முறையான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணை, அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, பொது சொத்துக்களை தனிப்பட்ட பயணத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்க தொடர்பானது.
அட்டகாசம் செய்யும் பாதாளக் குழுக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அநுர அரசு - ஐக்கிய மக்கள் சக்தி சரமாரி குற்றச்சாட்டு