ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை: இலங்கைக்கு அறிவிக்கப்பட்ட விடயத்தை வெளிப்படுத்தும் அலி சப்ரி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் புதிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
எனினும் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீளவும் அவ்வாறான விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பனவற்றின் ஊடாக கிரமமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள காரணத்தினால் மீண்டும் அவ்வாறானதொரு விசாரணை தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின் அவுஸ்திரேலிய பொலி, அமெரிக்காவின் எஸ்பிஐ மற்றும் இன்டர்போல் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




