தந்தையர் தினத்தில் இலங்கையின் தந்தையர் படும் பாடு!
தந்தையர் தினம்
சர்வதேச ரீதியாக இன்று தந்தையர் தினத்தை அனைவரும் நினைவுகொள்கின்றனர்.
அந்த வகையில் இலங்கையிலும் இது தொடர்பில் இன்று காலை முதல் பலரும் தமது தந்தையர்கள் தொடர்பில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்..
சில பதிவுகள், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புகொண்டவையாக அமைந்துள்ளன.
அதிலும் இன்றைய சண்டே டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று உண்மையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு
இந்த படம் உண்மையில் இலங்கையின் நெருக்கடியை மையப்படுத்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. தந்தை ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டிருக்க, அவரின் மகன் அவரை பார்த்து கேட்கிறான்
"அப்பா! தந்தையர் தினத்தில் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?"
அதற்கு வலப்பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அவரது மகள் கூறுகிறாள்.
"அப்பா! வாழ்கை் செலவை பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்" என்று. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியை அது படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
