யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த நபர் மாயம்!
காட்டு யானையிடமிருந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் குதித்த நபர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தந்தையும் 14 வயது மகனும் இவ்வாறு ஆற்றில் குதித்த நிலையில், தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் சம்பவம், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மயிலவெட்டுவான் - உப்போடை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டை அண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு யானையை கண்டவுடன், தங்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவன் மாத்திரம் வெளியில் வந்த நிலையில் தந்தையார் நீரில் இருந்து வெளிவராது இருந்துள்ளார்.
இதன்போத அவரை தேடிய சிறுவன், வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
