தென்னிலங்கையில் தந்தை ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை
தென்னிலங்கையில் மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலியில் மகளை மூன்று முறை கடுமையாக தவாறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம தண்டனை விதித்துள்ளார்.
சிறைத்தண்டனை
ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை என்ற ரீதியில் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam