மீட்புப் பணியின் போது விபத்திற்குள்ளான மெக்சிகன் விமானம் - சிறுமி உட்பட ஐந்து பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டன் விரிகுடா அருகே மெக்சிகோவைச் சேர்ந்த மருத்துவ சேவை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் இரண்டு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நபரைத் தேடும் பணி
விபத்து நடந்த நேரத்தில், விமானத்தில் எட்டு பயணிகள் இருந்துள்ளதோடு, அவர்களில் நான்கு பேர் பொதுமக்கள் மற்றும் மற்ற நான்கு பேர் மெக்சிகன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
🚨 BREAKING: Heartbreaking Tragedy – Mexican Navy Plane Carrying Young Burn Victim Child Crashes into Galveston Bay, At Least 5 Dead in Medical Mission Gone Wrong 8 aboard (Navy officers + civilians incl. kid headed for treatment via Michou and Mau Foundation). pic.twitter.com/4JRJRzU22J
— Global Insight (@GlobalInsight20) December 23, 2025
விமானத்தில் இருந்த இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் மற்றொரு நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இந்த விமானம் பயணித்ததாக மெக்சிகோ கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan