யாழில் பணத்துக்காக தந்தை செய்த மோசமான செயல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நான்கு வயதான தனது மகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு என்று பொய் கூறிப் பணம் சேகரித்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்தைப் பகுதியில் 4 வயது மகளுடன் தந்தை ஒருவர் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் சிறுமியை சக்கர நாற்காலியில் அமர்த்திச் சென்று தந்தை பணத்தைச் சேகரித்துள்ளார். சிறுமியின் நிலையைக் கண்டு மனமிரங்கிப் பொதுமக்கள் பலரும் பெரும் பணத்தை வழங்கியுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
கடும் வெயிலுக்கு மத்தியில் சிறுமியை வைத்து தந்தை யாசகம் பெறுவது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சிறுமியின் சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடையவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான சிறுமியை வைத்தே தந்தை மக்களை ஏமாற்றிப் பணம் சேகரித்துள்ளார்.
சிறுவர் காப்பகம்
தற்போது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒருவரே இந்த ஏமாற்று வேலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது குறித்த சிறுமி, சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
