யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை-கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீட் சௌபர் (43வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, முக்கிரியாவ பகுதியில் வயல் காவலுக்காக இரண்டு பேர் சென்று உயரமான குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த போது யானை உறங்கிக் கொண்டிருந்த நபரை இழுத்து வீசியதாகவும், மற்றையவர் தப்பிச்சென்றதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
