மண்வெட்டியால் தந்தையை கொலை செய்த மகன்: பொலிஸாரால் கைது
அம்பாறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை - மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்திலே நேற்றிரவு(13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தை படுகொலை
மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவரின் மகனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வயோதிபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் கைது

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam