தென்னிலங்கையில் தந்தையால் ஏற்பட்ட பரபரப்பு : பிள்ளைகளை கடத்தி வைத்து மிரட்டல்
கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவர் இந்த செயலை செய்துள்ளார்.
கைக்குண்டுடன் அவர் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
பணயக் கைதி
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் சந்தேக நபர் கைக்குண்டை ஏந்தியவாறு வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும் எனினும் மனைவி அங்கியிருந்து தப்பியோடியுள்ளார்.
பொலிஸாரால் மீட்பு
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது இரு பிள்ளைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டு காப்பாற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
