தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்
திருகோணமலை-பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி இன்று (08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாலையூற்று மயான வீதியில் வசித்து வரும் பொன்னத்துரை ராஜா (60வயது) எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றெடுத்த தந்தைக்கு பொல்லால் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்திய நிலையில், தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளைத் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தந்தையின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் மகனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam