வெளிநாட்டில் வசிக்கும் மனைவி - இலங்கையில் தந்தை செய்த கொடூர செயல்
ஹம்பாந்தோட்டையில் பெற்ற மகளுக்கு ஆபத்தான திரவத்தை அருந்த கொடுத்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள மனைவியை பழிவாங்கும் நோக்கிலேயே, தனது 6 வயது மகளுக்கு கழிப்பறையை சுத்தம் செய்யும் மருந்தை, அவர் அருந்த, கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
ஹுங்கம பிரதேசத்தில் கூலித் தொழிலாளியான தந்தையினால் இந்த மோசமான செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனைவி மீது கோபம்
வெளிநாட்டில் உள்ள தனது மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

இந்தநிலையில்,பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த 6 வயது சிறுமி கழிப்பறையை சுத்தம் செய்யும் மருந்தை குடித்தாரா என்பதனை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri