பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது
பதுளையில் ஆறு வயதுச் சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மடுல்சீமை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஆறு வயதுச் சிறுமியொருவர் பாடசாலைக்குச் செல்லாத தகவல் அறிந்து மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்துள்ளனர்.
இதன்போது, குழந்தையின் தாய் வெளிநாடு சென்றிருப்பதும், தகப்பன் மூலமாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
விளக்கமறியல்
இதனையடுத்து, குறித்த சிறுமியின் தந்தை கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று பசறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |