மட்டக்களப்பில் சோதனையில் சிக்கிய தந்தை - மகன் : 600 கிராம் கஞ்சா மீட்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் வர்த்தகர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன்தினம்(05.06.2026) இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகனும் கைது
சம்பவ தினத்தன்று இரவு ஆரையம்பதி பகுதியில் உள்ள வீதிகளில் மாறு வேடத்தில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது வியாபாரத்துக்காக கேரளா கஞ்சாவுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 600 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும், இவரின் தந்தை நீண்டகாலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri