இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் நேற்றையதினம்(21.11.2025) உயிரிழந்துள்ளார்.
மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாக டொரிங்கடன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில்
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வருகின்றது.

இந்நிலையில் இவர் இடையிடையே யாழ்ப்பாணம் வந்து செல்வது வழமை. அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி காலை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan