இலங்கையில் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: குவிக்கப்பட்ட பொலிஸார்
இலங்கையின் வடபகுதியிலிருந்து தென்னிந்திய நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
அனுராதபுரம் பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள திரையரங்கம் ஒன்றில் லியோ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக இணையத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , வவுனியா , புத்தளம் , திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலோனோர் முற்பதிவுகளை செய்து திரைப்பட்த்தை பார்க்க்க வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் பட காட்சிகளின் ஒலியமைப்பு தெளிவின்மை காணப்பட்டதுடன் பல மணிநேரமாக தொழிநுட்ப பிரச்சனைகளை இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இரசிகர்கள் தமக்கு தெளிவான ஒலியமைப்புடன் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது பணத்தினை மீளத்தருமாறு திரையரங்கின் வரவேற்பு இடத்தினை முற்றுகையிட்டனர்.
இதனால் திரையரங்கில் பதற்ற நிலமை அதிகரித்தமையுடன் அனுராதபுரம் பொலிஸார் வருகை தந்து திரையரங்கின் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.
திரையரங்க நிர்வாகத்திடமிருந்து கடிதம்
இது குறித்து திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கையில், படத்தின் இறுவட்டில் உள்ள பிரச்சனையினால் ஒலி தெளிவின்மை காணப்படுவதாகவும் பணத்தினை கணக்கிற்கு வைப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.
எனினும் திரையரங்க நிர்வாகத்தினர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துடன் பணத்தினை கையில் தருமாறும் இரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதியில் பொலிஸாரின் தலையீட்டில் நிர்வாகத்தினர் சில தினங்களில் வங்கிக்கு பணத்தினை வைப்பிலிடுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதி வழங்கியதுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரி தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து ரசிகர்கள் திரையரங்கினை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தனர்.
சுமார் 150கிலோமீற்றர் தூரத்திற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருகை தந்த
இரசிகர்களுக்கு பண விரயமும் மிகுந்த ஏமாற்றமும் கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.






பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
