றொரன்டோவில் பாதையோரத்தில் நின்றிருந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
கனடா - றொரன்டோவில் பாதையோரத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
டன்போர்த் மற்றும் சிடார்வெல் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடைபாதைக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது வாகனம் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனமொன்றில் பயணம் செய்த நபரொருவர் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam