வாகனத்தின் கதவை திறந்ததால் நிகழ்ந்த கோர விபத்து : ஒருவர் மரணம்..! மற்றுமொருவர் வைத்தியசாலையில்
ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அதில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின் இருக்கையில் பயணித்த பெண்
விபத்தில் உயிரிழந்தவர் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய சுமனாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.
மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வுபெற்ற விசேட தேவையுடைய இராணுவ சிப்பாயும், முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan