மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சி குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலமும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri