திருகோணமலையில் 3வது நாளாக தொடர்கிறது சாகும்வரை உண்ணாவிரதம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா. ஆஷா மற்றும் இரா.கோசலாதேவி இருவரும் இன்று 3வது நாளாகவும் திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது குறித்து திருகோணமலை மாவட்ட தலைவி நா. ஆஷா கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan