மட்டக்களப்பில் படையெடுத்த விவசாயிகள்! ஓடி ஒளிந்த அரசியல் தலைவர்கள்
பலதடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள் இன்று மட்டக்களப்பு நகரை சில மணி நேரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
இருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளமை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் விவசாயிகள் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஜனவரி மாதத்தின் பின் மில்லியனரும், பில்லியனரும் ஆவார் என்று பிள்ளையான் பல இடங்களில் தெரிவித்த கருத்தும், உரப் பிரச்சினை மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று விவசாயிகள் ஒன்றுகூடி நகரையே முற்றுகையிட்டுள்ளனர்.
எது என்ன நடந்தாலும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவின் கையைப் பலப்படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் இரண்டு அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கும் முகமாக ஒன்றுகூடிய விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri