கிளிநொச்சியில் விவசாய வீதிக்கான நீர்ப்பாசன கால்வாயை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி- உருத்திரபுரம் பகுதியில் விவசாய வீதிக்கான பாலம் மற்றும் நீர்ப்பாசன கால்வாய் என்பவற்றை உரிய முறையில் அமைத்து தருமாறு விவசாயிகள் மற்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயினூடாக சுமார் 650 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்புக்கான நீர்ப்பாசன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கால்வாய் சேதமடைந்துள்ளதால் இதற்கான நீர்ப்பாசனமும் முற்று முழுதாக துண்டிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணி
அத்துடன் இதனுடன் இணைந்த விவசாய வீதியூடாக புதுமுறிப்பு சிவன் சோலை உருத்திரபுரம் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.

குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.இதனால் போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் பாலத்தினதும், நீர்ப்பாசன கால்வாயினதும் கட்டுமானப்பணிகளை விரைவாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் இன்றைய தினம் குறித்த பகுதியில் ஒன்று கூடி மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam