நெல்லிற்கான உத்தேசித்த விலை வேண்டும்: வீதிக்கு இறங்கிய விவசாயிகள் (Photos)
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (10.07.2023) ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் அம்பாறை, உகன, தமனை பிரதேச விவசாய அமைப்புகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில் இன்று காலை ஒன்று திரண்டனர்.
இதில் ஒரு கிலோ நெல்லை 100 ரூபாவாகவும் காய்ந்த ஈரப்பதன் அற்ற நெல்லை கிலோ 120 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் களஞ்சிய சாலையை திறந்து நெல்லினை முழுமையாக கொள்வனவு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கையளிக்கப்பட்ட மனு
இதுமட்டுமன்றி கடந்த கால அரச கொள்கையினால் உரங்கள் கிடைக்காமல் நஸ்டத்தை சந்தித்ததுடன் உற்பத்தி விலையை விட கொள்வனவு விலை குறைவாக காணப்படுவதால் நாம் சிரமம் அடைந்துள்ளோம்.
அரசினால் அறிவிக்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் தமக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் ஊடாக அரசு மேற்கொள்ளவேண்டும்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இது தொடர்பில் தான் உரிய அமைச்சரிடம் ஜனாதிபதியிடம் ஆலோசித்து தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை உதவி பிரதேச செயலாளரிடமும் மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
