சம்மாந்துறையில் விவசாய காணியுள்ளவர்கள் அரச உதவியில் தங்கியிருகிறார்கள்: நௌசாட் கவலை

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Rusath Aug 04, 2022 01:55 PM GMT
Report

24 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய காணியுள்ள சம்மாந்துறையில் 52 சதவீத மக்கள் அரச உதவியில் தங்கியிருப்பது கவலையளிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று(3) பிரதம அதிதியாகயாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றோம் என்ற பிரகடனத்துடன் சம்மாந்துறையில் ஏறத்தாழ 52 சதவீதமான குடும்பங்கள் அரச உதவியிலையே தங்கி வாழ்கின்றது.

நௌசாட்டின் கவலை

இதனை சம்மாந்துறையின் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. என்னுடைய மனதில் நீண்டகாலமாக இருந்துவரும் இந்த மனக்குறையைப் பற்றி சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.

சம்மாந்துறையில் விவசாய காணியுள்ளவர்கள் அரச உதவியில் தங்கியிருகிறார்கள்: நௌசாட் கவலை | Farmers In Samantha Remain Dependent On State

இது வெட்கப்படும் விடயமாகவே உள்ளது. 24 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகள் உள்ளது. அதில் பயிர்செய்கைகளும் இடம்பெறுகிறது.

மாற்றங்கள் அவரவர் மனதிலிருந்தும், அடிப்படையிலிருந்து வர வேண்டும். அரச அல்லது தனியார் உதவிகள் சரியாக இனங்கண்டு உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

அரச, தனியார் உதவிகள்

பிழையான தகவல்களை வழங்கி அரச, தனியார் உதவிகள் பெறுவது பாவம் என்ற நிலைக்கு மக்களாகிய நாம் வரவேண்டும்.

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு உணவின்றி இருக்கும் மக்களுக்காக ஏதாவது செய்வது தொடர்பில் சம்மாந்துறை முக்கிய அமைப்புகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை செய்திருந்தேன்.

ஆனால் சம்மாந்துறையின் இளைஞர்கள் தாமாக முன்வந்து அந்தப்பணியை வெற்றிகரமாக செய்தார்கள்.

இதன்போது சேகரிக்கப்பட்ட அவர்களின் தகவலைகளை அடிப்படையாக கொண்டு இனிவரும் காலங்களில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

சமூக சேவைகள் அமைப்புக்கள்

சமூக சேவைகள் இறைவனுக்கு பயந்து முன்னெடுக்கப்பட வேண்டும். பயனாளிகளை பகிரங்கப்படுத்தி அவர்களை பொதுவெளியில் சங்கடப்படுத்துவது எப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சம்மாந்துறையில் விவசாய காணியுள்ளவர்கள் அரச உதவியில் தங்கியிருகிறார்கள்: நௌசாட் கவலை | Farmers In Samantha Remain Dependent On State

இன்று நாம் இருக்கும் நிலைக்கு நாம் எல்லோரும் பொறுப்பாளிகள். வருமானத்தை மீறி செலவு செய்யும் பழக்கத்தினால் தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்தில் 300 க்கு மேற்பட்ட சமூக சேவைகள் அமைப்புக்கள் இருக்கிறது. ஆனால் இயங்குநிலையில் உள்ளது விரல் விட்டு என்னும் அளவுக்கே இருக்கிறது.

இதனை பெரும் குறைபாடாக நான் பார்க்கிறேன். என்னுடைய பொதுவாழ்வில் நான் நிறைய விடயங்களை அறிந்துகொண்டு அதனூடாக என்ன வழிகாட்டல் இருக்கின்றது என்று பார்க்கிறேன்.

சமூக சேவைகள் மூலம் சமூகம் கட்டியெழுப்பட வேண்டும். இப்போது அரசியல் எனும் சொல் மக்களுக்கு மிகவும் வெறுப்பாக மாறியுள்ளது.

சமூக சேவை அமைப்புக்களுடன் இணைந்து பிரதேசத்தின் கட்டமைப்பில் மேம்பாட்டை உருவாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்”என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US