விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்திற்கு தேவையான நீரை அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதில்லை எனவும் அது இந்த நாட்டின் மக்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேவையாற்ற முயற்சி
நெல் விற்பனைச் சபை மக்களுக்காக சேவையாற்ற முயற்சித்து வரும் நிலையில் மக்களின் பணத்தில் உர மானியம் வழங்கப்படுவதாகவும், நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே விவசாயிகள் சமூகத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைக்கு அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் விவசாயிகளின் விளைச்சலில் ஒரு பகுதியை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் லால்காந்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri