அம்பாறையில் விவசாயிகளால் போக்குவரத்து சீர்கேடு- பொதுமக்கள் விசனம்
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடப்படுவதாகவும், இதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களிலுள்ள நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக விவசாயிகள் தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை
குறித்த நிலைமை போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், உலர விடும் நெற்கள் ஒரு பக்க வீதியை தடைசெய்து உலரவிடுவதனால் இரு போக்குவரத்து வீதி தடைப்படுவதுடன் வீண் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சுயலாபத்திற்காக வீதிகளை பயன்படுத்தவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான சட்ட விரோதமாக வீதிகளில் நெற்களை உலரவிடுபவர்களுக்கு எதிராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.




மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam