முல்லைத்தீவில் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிகளை விளைவித்த விவசாயின் நிலை
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேசத்தை சேர்ந்த துரை என அழைக்கப்படும் கமலராஜன் என்ற விவசாயி சுமார் நான்கு ஏக்கர் காணியில் பூசணியை பயிரிட்டுள்ளார்.
இதற்காக சுமார் நான்கு இலட்சம் வரை செலவளித்த நிலையில், பூசணிக்காய்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு சென்ற போது அவரால் அதனை சந்தைப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பூசணிக்காய் விற்பனை
ஆரம்பத்தில் ஒரு கிலோ 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விலைக்கும் எவரும் கொள்வனவு செய்வதாக இல்லை என தெரிவித்த அவர், சந்தைக்கு கொண்டு சென்ற பூசணிக்காய்களை மீண்டும் வீட்டுக்கொண்டு வந்து குவித்துள்ளார்.
இதன் காரணமாக விவசாயத்தை கைவிட்டுவிடுவோம் என்ற மனநிலை தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam