அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை: வெள்ளத்தில் பாதிப்படைந்த விவசாயிகள் விசனம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்ப்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அண்மை நாட்களாக பெய்த கனமழை காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ள நிலையில் பல்வேறு கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கெண்ட விவசாயிகள் தாங்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!
அழிவடைந்த வயல் நிலங்கள்
மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிடவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த போகத்தில் காப்புறுதி செய்தும், அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில் பார்வையிடவில்லை எனவும், இழப்பீடு வழங்கபபடவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




