வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்று(12.05.2026) மாலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்
வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிய போது கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening